இந்தியாவில் தான் அதிக அளவில் யோகா பயிற்சி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
பதிவு : ஜூன் 21, 2018, 08:45 AM
உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில் தான் யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

4வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரகாண்ட்  தலைநகர் டேராடூனில் வன ஆராய்ச்சி வளாகத்தில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டு மக்களுக்கு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்தார். கங்கை நதி பாயும் இடத்தில் யோகா பயிற்சி மேற்கொள்வது வாழ்க்கையில் பெரும் பாக்யம் என தெரிவித்தார்.

யோகா பயிற்சி மேற்கொண்டு சூரியனை வரவேற்போம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் உறுப்புகள் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடைவதாக குறிப்பிட்ட மோடி, அவசர பணிகளுக்கு இடையேயும் யோகா பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். உலக மக்களை ஒன்றிணைக்கும் அதி தீவிர சக்தி படைத்தது யோகா எனவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

30ஆம் தேதி இரவு 7 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்கிறார்

பிரதமர் மோடி 2வது முறையாக வருகிற 30ம் தேதி பிரதமர் பதவி பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

56 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

98 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

712 views

பிற செய்திகள்

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

67 views

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம் : தற்போதைய நிலையே தொடர மத்திய அரசு முடிவு

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

36 views

தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

635 views

பாலகங்காதர திலகருக்கு பிறந்த நாள் விழா : அத்வானி, மக்களவை சபாநாயகர் மலர்தூவி மரியாதை

பால கங்காதர திலகரின் 163-வது பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப் படத்துக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

31 views

வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

டெல்லி - கட்டாரா இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

66 views

திருப்பதி கோவிலுக்கு நெய் வழங்க உள்ள மதுரை ஆவின் நிறுவனம்

திருப்பதி தேவஸ்தான கருவறை பூஜைக்கும், திருப்பதி லட்டு தயாரிப்பிற்கும் 175 டன் பசு நெய் வழங்குவதற்கான டெண்டர், மதுரை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.