189 சதுர அடி வீடு - ரூ 53 லட்சம்

வாடகை கொடுப்பதற்கு பதில் சொந்த வீடு தேடும் மும்பைவாசிகள்
189 சதுர அடி வீடு -  ரூ 53 லட்சம்
x
சென்னையில் குறைந்தபட்சம் ஒரு 600 சதுர அடியில் வீடு வாங்க, ஏரியாவை பொறுத்து 20 லட்சத்தில் இருந்தே வீடு வாங்கலாம்.. மும்பையில் அப்படி அல்ல...  இந்த அளவு வீட்டிலும் வசிக்க முடியுமா என்ற ஆச்சர்ய படுத்தும் அளவில் தான் மும்பையில் சில இடங்களில் வீடுகள் உள்ளன. 

ஆம்.. ஒரு வீடு 189 சதுர அடி, சென்னையில் ஒரு சராசரி வீட்டில் 3ல் ஒரு பங்கு. இதை வாங்க மும்பையில் கடும் போட்டி..  நாம் எப்படி  COMPACT HOMES என்று வைத்திருக்கிறோமோ.. அது போல் மும்பையில் இருப்பது MICRO HOMES.. 189 சதுர அடி வீட்டில், 7க்கு 7 அடியில் ஒரு ஹால், 9க்கு 7 அடியில் ஒரு படுக்கையறை, 6க்கு 7 அடியில் ஒரு சமையலறை. மூன்றரைக்கு 7 அடியில் ஒரு அட்டாச்டு குளியலறை...  இது தான் MICRO HOME.. இந்த 189 சதுர அடி வீட்டின் விலை என்ன தெரியுமா?  53 லட்சம்.. இது தான் குறைந்தபட்ச விலை... 

 
அடுத்தாக இன்னொரு ரகம் உண்டு, அது 320 சதுர அடி, அதன் விலை 80 லட்சம் தாண்டி செல்கிறது.  10 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு சம்பளம் வாங்குபவர்கள், 10க்கு 10 அடி அறைக்கு ஆயிர கணக்கில் வாடகை கொடுப்பதற்கு, அதை வங்கியில் மாத தவணையாக செலுத்தலாம் என்பவர்கள் தான் இந்த ரக வீடுகளை அதிகம் வாங்குவதாக கூறுகின்றனர்.  

மும்பையில் தற்போது இந்த ரக வீடுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர்.  ஜப்பான், நியூயார்க், லண்டன் என விலை மிக அதிகமான நகரங்களிலும், விற்பனைக்கு இடம் குறைவாக உள்ள நாடுகளிலும், இந்த ரக வீடுகள் விற்பனையில் இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்