விஜய் மல்லையாவின் விமானத்தை விற்க 29, 30ம் தேதி ஏலம்

விமானம் விற்பனை ஆகாமல் போனால் என்ன செய்வது
விஜய் மல்லையாவின் விமானத்தை விற்க 29, 30ம் தேதி ஏலம்
x
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு சற்றும் சலைக்காத வகையில், அவரது சொத்துக்களை விற்பனை செய்ய வங்கிகள் முயற்சித்து வருகின்றன.

 
கோவாவில் இருந்த KINGFISHER VILLA  சொகுசு பங்களாவை, 150 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு, நீண்ட போராட்டதிற்கு பிறகு 73 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விஜய் மல்லையா, தன் சொந்த தேவைக்கு பயன்படுத்திய விமானம் மீண்டும் ஏலத்திற்கு விடப்பட உள்ளது. 

 விஜய் மல்லையா, ஆயிரம் கோடி ரூபாய் சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி இந்த விமானம் வரித்துறை வசம் கொண்டு வரப்பட்டது.  2013ம் ஆண்டு முதல் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க மட்டும், ஒரு மணி நேரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய், கிட்டதிட்ட 5 ஆண்டுகளாக மும்பை விமான நிலையத்தில், விஜய் மல்லையாவின் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.    

மொத்தமாக 31 பேர் பயணம் செய்ய கூடிய இந்த விமானத்தை 550 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  ஏலத்தில் விற்பனை ஆக வில்லை என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்த அதிகாரிகள்,  இந்த விமானத்தை எடைக்கு போட்டால், எத்தனை கிலோ SCRAP  தேறும் என்பது வரை கணக்கிட்டு வைத்திருகிறார்கள்... இந்த விமானம் பறக்க கூடிய நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ள மும்பை விமான நிலைய அதிகாரிகள், SCRAPக்கு போட்டால், 10 ஆயிரம் கிலோ பெறும் என்று தெரிவித்துள்ளனர்... இவை அனைத்தையும் தாண்டி, மிகந்த நம்பிக்கையுடன் வரும் 29 மற்றும் 30ம் தேதி இந்த விமான ஏலத்திற்கு வருகிறது.... 


Next Story

மேலும் செய்திகள்