மருத்துவ படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு?

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, ஆண்டுக்கு 11 ஆயிரத்து 600 ரூபாய் முதல், 23 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை, பல்வேறு வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு?
x
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவர்கள்,  கல்வி கட்டணமாக வருடத்திற்கு, 13 ஆயிரத்து 600 ரூபாயும், பி.டி.எஸ்., படிப்புகளில் சேரும் மாணவர்கள், 11 ஆயிரத்து 600 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவர்களுக்கு, 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் முதல், 4 லட்சம் ரூபாய் வரை, கல்லூரிகளுக்கு ஏற்றது போல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

 
இதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும், கலந்தாய்வு மூலம் அரசே நிரப்புகிறது. கட்டணத்தையும் அரசு நிர்ணயித்திருக்கிறது. அதன்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ்., படிப்பிற்கு 6 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவே, என்.ஆர்.ஐ., மாணவர்களாக இருந்தால், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பி.டி.எஸ்., படிப்பிற்கு 9 லட்சம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், 15 விழுக்காடு, என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்