மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 பாடங்கள் நீக்கமா...?

தமிழ் உள்ளிட்ட பிற மொழி பாடங்களிலும் நடத்தப்படும் என பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 பாடங்கள் நீக்கமா...?
x
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உட்பட 17 மொழிகள் விருப்ப பாடத்தில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் விளக்கம் அளித்துள்ளார். 

கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்வில்  விருப்ப மொழி பாடங்களில் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால், மத்திய ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்குபெற விரும்புவோர் இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து இரண்டு மொழிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 



இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர்,  தமிழ் உள்ளிட்ட பிற மொழி பாடங்களிலும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளார். 

மத்திய ஆசிரியர்கள் தகுதி தேர்வை 4 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாகவே 3 மொழிகளில் தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. ஆனால் அதை மாற்றி கடந்த 15-ம் தேதி தமிழ் உட்பட 20 மொழிகளில் தேர்வு எழுத நான் உத்தரவிட்டுள்ளேன் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்