"வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் நோட்டீஸ் செல்லும்"

வழக்கு தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினாலும்,அது செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் மூலம் அனுப்பும்  நோட்டீஸ் செல்லும்
x
எஸ்பிஐ கார்ட்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடன் அட்டையில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவை தொகை வைத்திருந்த ரோஹித் ஜாதவ், என்பருக்கு அவரது வீட்டு முகவரிக்கும் செல்போன் எண்ணுக்கும் வாட்ஸ்அப் மூலமும் சம்மந்தப்பட்ட நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வீடு மாறிவிட்டதால் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று ஜாதவ் கூறினார். 

அதற்கு வங்கி தரப்பில், வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் சென்று சேர்ந்ததற்கான டிக் மார்க்குகள் சாட்சியமாகப் பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, வழக்கு தொடர்பான நோட்டீஸ் நேரிலோ, தபாலிலோ  அனுப்பப்படும் எனவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை போல  வாட்ஸ் அப் மூலம், நோட்டிஸ் அனுப்புவதும் செல்லும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்குத் தொடர்பாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் செய்திக்கு நீல நிற டிக் மார்க் வருவதே, நோட்டீஸ், சம்பந்தப்பட்டவருக்கு சென்று சேர்ந்ததற்கான ஆதாரம் என்றும் நீதிபதி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்