அரியவகை பொருட்களை சேகரிக்கும் காவல் அதிகாரி

பழங்கால அரியவகை பொருட்களை சேகரித்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் காவல்துறை அதிகாரியை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
அரியவகை பொருட்களை சேகரிக்கும் காவல் அதிகாரி
x
புதுச்சேரியை அடுத்த வில்லியனூரை சேர்ந்தவர், கேசவன். புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவரது தந்தை வில்லியனூரில் உணவு விடுதி நடத்தி வந்தபோது கிடைத்த வித்தியாசமான நாணயங்களை விளையாட்டாக சேகரிக்க தொடங்கியுள்ளார், கேசவன்.

 
சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் காலத்து நாணயங்கள் தொடங்கி பிரெஞ்சு ஆட்சியின் போது வெளியிடப்பட்ட அரளிப் பூ காசு, கோழி காசு, சதுர காசு, சாத வாகனா என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்களை கேசவன் சேகரித்து வைத்திருக்கிறார். . 


சோழர் காலத்தில் பழவேட்டரயர்கள் பயன்படுத்திய வாள்கள், 1956க்கு முன்பிருந்த 63 வகையான கேமராக்கள், பழங்கால அடுப்பு, விளக்கு, பாக்கு வெட்டும் கருவி, செப்பு மற்றும் பித்தளையாலான 160 வகை குவளைகள், விதம் விதமான தபால் தலைகள் என கேசவனின் ஆர்வத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் ஏராளம். 

பழங்கால வரலாற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய  வேண்டும் என்பதற்காகவே, அரசு பள்ளிகளில் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார்.

இன்றைய இளம் தலைமுறையினருக்கு பழங்கால வரலாற்றை அறிமுகம் செய்வதோடு ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் கேசவனின் செயலானது பாராட்டை கடந்து போற்றுதலுக்குரியது என்றால் மிகையில்லை. 


Next Story

மேலும் செய்திகள்