காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் பட்டியலை 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினர்களுக்கான பட்டியலை வருகிற 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய  உறுப்பினர்கள் பட்டியலை 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
x
தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநில அரசுகள் உறுப்பினர்கள் பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டது. 

ஆனால் காலம் தாழ்த்தி வரும் கர்நாடகா அரசு, துறை அமைச்சர் பதவி ஏற்றதும், உறுப்பினர் பட்டியல் வழங்கப்படும் என மத்திய அரசுக்கு விளக்கம் அளித்திருந்தது. 

 
இந்நிலையில், வரும் 12-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

அரசியல் குழப்பம் தீர்ந்து அமைச்சரவை அமைக்கப்பட்டதால், உடனடியாக பட்டியலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு உறுப்பினர்கள் பட்டியலை தாக்கல் செய்ததும், முழுமையான உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு, முதல் கூட்டத்திற்கான தேதியை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்