அதிகரித்து வரும் ஸ்டார்ட் அப் தொழில் கலாச்சாரம்

STARTUP நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது பல முதலாளிகளையும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
அதிகரித்து வரும் ஸ்டார்ட் அப் தொழில் கலாச்சாரம்
x
STARTUp  என்றால் என்ன என்று கேட்டால், இருக்கும் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வை கொண்டு வருவது தான் STARTUP என்றும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.. உதாரணமாக, ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வர வேண்டும், அப்ளிகேசனில் ஆடர் செய்தால், 10 ஹோட்டலில் இருந்து, உங்களுக்கு தேவையான உணவுகள், வீட்டிற்கே வருகிறது.. இதை எல்லாம் தாண்டி, வீட்டில் PENDRIVE  மறந்து வைத்து விட்டேன், அதை உடனடியாக அலுவலகத்திற்கு எடுத்து வர வேண்டும், தினமும் மதியம் 1 மணிக்கு வீட்டில் இருந்து உணவு எடுத்து கொண்டு வர வேண்டும், என்றால் கூட அதையும் எடுத்து வர ஆட்கள் இருக்கிறார்.. அதை STARTUP நிறுவனங்கள் சில வெற்றிகரமாக செய்து வருகின்றன.. 

 
இந்த நிறுவனங்களுக்கும் முதலாளிகள் உண்டு.. அவர்களுக்கு 25 வயது தான்.. படித்து முடித்த உடன், வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன என்று பலருக்கு தற்போது வேலை கொடுத்து வருகிறார்கள்... STARTUP  நிறுவனத்தை தொடங்கி நாங்கள் எப்படி வென்றோம் என்பதை நாவல் வடிவில் ஒரு புத்தகமாக எழுதிய நிறுவனங்களும் உண்டு..

வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், வேலைக்கு அட்கள் தேவை என்று பெரும்பாலும் விளம்பரம் செய்பவை STARTUP நிறுவனங்களாக தான் இருக்கின்றன. 


மக்களின் தேவைகளை வீட்டில் இருந்தபடியே பூர்த்தி செய்துகொள்ள உதவும் இவர்கள், புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. 

Next Story

மேலும் செய்திகள்