மாணவிகளுடன் உரையாடல் : தூத்துக்குடி வருவதாக பிரதமர் மோடி உறுதி
பதிவு : ஜூன் 06, 2018, 01:33 PM
இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்கும் வகையில், இளைஞர்களுக்கு போதிய நிதி ஒதுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பாஜக அரசின் நான்காண்டு சாதனைகளை போற்றும் வகையில் பிரதமர் மோடி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு திட்ட பயனாளிகளிடம் காணொலி வாயிலாக உரையாடி வருகிறார். இன்று ஸ்டார்ட் அப் திட்டத்தால் பயனடைந்த, தொழிலதிபர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், சிறிய கிராமங்களில் மட்டுமல்ல, மிகப்பெரிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதத்துடன் கூறினார். அதே சமயம், ​தொழில் துவங்கும் ஆர்வமுள்ள இளைஞர்களின் போதுமான நிதியில்லாமல் தவிப்பதால், நிதிக்கு நிதி எனும் புதிய செயல்முறை திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளிடம் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது மாணவிகள், தாங்கள் வடிவமைத்த சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட, நவீன நீர் பாசன இயந்திரம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், இந்த நவீன இயந்திரத்தை, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தூத்துக்குடி வரவேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஆர்வத்துடன் கேட்ட பிரதமர் மோடி, தமிழில் வணக்கம் கூறி, தூத்துக்குடி வருவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

85 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

624 views

மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு

அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

274 views

வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி

வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

127 views

பிற செய்திகள்

பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் : தடுத்து நிறுத்திய போலீசாருக்கு காயம்

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்

80 views

கல்வி கற்று உயர்ந்த பின் பெற்றோரை மறந்து விடாதீர்கள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

19 views

பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் : தடுத்து நிறுத்திய போலீசாருக்கு காயம்

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.

39 views

அமெரிக்க ராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி : இசைக் கருவிகளை இசைத்து பாடிய அமெரிக்க வீரர்கள்

பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க ராணுவ குழுவினர் வந்துள்ளனர்.

19 views

கேரளாவுக்கு செல்லும், 108 புதிய சிவலிங்கங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது.

21 views

கேரள முதல்வரின் படத்தோடு வைக்கப்பட்ட விளம்பர பலகை : ரயில்வே அதிகாரிகள் விளம்பர பலகையை அகற்றியதால் பரபரப்பு

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் படத்தோடு வைக்கப்பட்ட விளம்பர பலகையை ரயில்வே அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.