'நிபா வைரஸ்' - ஒரு பார்வை

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
நிபா வைரஸ் - ஒரு பார்வை
x
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ்  மூளையை தாக்குவதால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு ஒரு சில நாட்களில் மரணம் ஏற்படுகிறது. இந்த வைரசுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். செவிலியர் ஒருவரும் உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும்  கோழிக்கோடு மருத்துவமனையில் பணியாற்றிய 3 செவிலியர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு நடத்தி வருகிறது. கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்