இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை : கொள்ளையனை காட்டிக் கொடுத்த சிசிடிவி

மதுரை இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தொடர்பான, சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை : கொள்ளையனை காட்டிக் கொடுத்த சிசிடிவி
x
மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள இந்தியன் வங்கியில், ஓய்வு பெற்ற ஊழியருக்கு பணி நிறைவு விழா, அந்த கட்டடத்தின் 4வது தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஊழியர்கள் சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட, மர்ம நபர் ,
கணக்காளர் அறையில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கட்டுகளை திருடிக் கொண்டு, தான் எடுத்து வந்திருந்த பையில் வைத்து எடுத்துச் சென்றார். இந்தநிலையில், பணி நிறைவு விழா நிறைவடைந்த பின், திரும்பி வந்து பார்த்த கணக்காளர் சக்திகணேஷ், 10 லட்ச ரூபாய் காணவில்லை என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்து, வங்கி மேலாளர் சீனிவாசனிடம் புகார் தெரிவித்தார்​.


Next Story

மேலும் செய்திகள்