"நாடி, நரம்பு, ரத்தத்தில் ஊறிய வெறி தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும்" - செலிபிரிட்டி உடைத்த உண்மை

x

"நாடி, நரம்பு, ரத்தத்தில் ஊறிய வெறி

தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும்"

நாட்டின் மெகா செலிபிரிட்டி உடைத்த உண்மை

யார் அந்த மிகப்பெரிய பிரபலங்கள்?

மிக பிரபலமான இந்திய பாடகரான யோ யோ ஹனி சிங் தன்னை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கியது மிகப்பெரிய பிரபலங்கள் என பகீர் கிளப்பியுள்ளார்...

யோ யோ ஹனி சிங்...அல்லது சுருக்கமாக ஹனி சிங் என்று அழைக்கப்படுபவர் தான் பிரபல பாடகரான இந்த ஹிர்தேஷ் சிங்... பிரபல இந்திய ராப்பரான இவர் தமிழில் எதிர்நீச்சல் படத்தில் கூட ஒரு பாடல் பாடியிருப்பார்...இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் இசைக்கலைஞர்களில் இவரும் ஒருவர்...

நெட்ஃப்ளிக்சில் Yo Yo Honey Singh: Famous என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஆவணப்படத்திற்காகத் தயாராகி வரும் ஹனி சிங் தன் சர்ச்சைக்குரிய கடந்த காலத்தைப் பற்றிப் பேசி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்...

போதைப் பொருள் எனும் அரக்கனால் தன் வாழ்க்கை சிக்கி சின்னாபின்னமான கதையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஹனி சிங்...

இந்த போதைப் பொருள் பழக்கம் தான் தனது திருமண வாழ்க்கையை பாதித்ததாகத் தெரிவித்த அவர்...தனக்கு 2011ல் திருமணமான பிறகு...வெறும் 9 முதல் 10 மாதங்கள் மட்டுமே நன்றாக வாழ்ந்ததாகவும்...அதன்பிறகு போதைப் பொருளுடன் புகழ் போதையும் தலைக்கேறி...தன் தாய், தந்தை, முன்னாள் மனைவி ஷாலினி என அனைவரையும் பிரிந்து வந்து விட்டதாகவும்...அவர்களை மறந்து விட்டதாகவும்...தான் அவர்களுக்குத் தவறு இழைத்து விட்டதாகவும் மனம் திறந்துள்ளார் ஹனி சிங்...

தூங்குவதற்கு முன்...தூங்கி எழுந்த பின்...என்று எல்லா நேரங்களிலும் தனக்கு போதைப் பொருள் தேவைப்பட்டதாகவும்...எப்போதும் போதையில் தான் இருந்ததாகவும் தெரிவித்த ஹனிசிங்...அந்த சமயங்களில் "நான் என்ன செய்கிறேன்?...என்ன பேசுகிறேன்?...என்றே எனக்குத் தெரியாது என ஒப்புக் கொண்டுள்ளார்...

போதைப் பொருளை உங்களுக்கு யார் அறிமுகப்படுத்தியது என்ற கேள்விக்கு..."சில பெரிய ஆட்கள்...சில மிகப்பெரிய ஆட்கள்...செல்வாக்கு மிக்க நபர்கள்" என்று பகீர் கிளப்பியுள்ளார் அவர்...

ஏற்கனவே பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன... மிகப்பெரிய பிரபலங்கள் எல்லாம் மாட்டியுள்ளனர்...

இந்த சூழலில் ஹனி சிங் குறிப்பிடும் அந்த "செல்வாக்கு மிக்க நபர்கள்" யார் என்பது புரியாத புதிராக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்