நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Thanthitv
பிரபல திரைபட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் நடிகர் ஏ.எல்.உதயா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015 தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்டு செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக கூறியிருந்தார். இந்நிலையில், சங்கத்திற்கு கட்டடம் கட்ட 30 கோடி ரூபாய் கடன் பெறுவது தொடர்பாக கருத்து தெரிவித்ததால், தன் மீது சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 2022 செப்டம்பர் 27 முதல் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகக் கூறயிருந்தார். இந்த சஸ்பெண்ட் காலம் முடிவடைந்த நிலையில், நாளை நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு, தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், பொதுக்குழு கூட்டத்தில் அனுமதிக்கும்படி உத்தரவிட கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை 8வது உதவி நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, மனுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.