விஜய் நகர்த்தும் அடுத்த காய்..! - அரசியல் களமே திரும்பிய தருணம்

x

தளபதி விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்பக் குழு ஆலோசனை கூட்டம் வரும் சனிக்கிழமை காலை, மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், இளைஞர் அணி, மாணவர் அணி உட்பட பல்வேறு அணிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக செயல்படுவது குறித்தும், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், அரசியல் கட்சி துவங்குவதற்கான அடித்தளங்கள் மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்