தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்...வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

x

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி உறுப்பினருமான கோவிந்தா மும்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பணி நிமித்தமாக வெளியே புறப்பட்ட நடிகர் கோவிந்தா, தன்னுடைய துப்பாக்கியை பரிசோதனை செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக நடிகர் கோவிந்தா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் கோவிந்தா காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு விட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கோவிந்தாவின் துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்