காதலர் தின ஸ்பெஷல்! ரீ-ரிலீஸ் செய்யப்படும் 'காதல் காவியங்கள்'

x

காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடும் பல திரை காவியங்களில் நெஞ்சை நொறுக்கும் காதால் தோல்வி படங்களே அதிக அளவில் கொண்டாடப்படுகின்றன.

அப்படி சொல்லாமலேயே முடிந்து போன தனது காதலை இன்றளவும் மறக்க முடியாமல் பயணிக்கும் உன்னத இதயங்கள் கொண்டாடும் கிளாசிக் திரைப்படம் '96'

இன்று ரீ-ரிலீஸாகிறது.

திரையில் ராம் - ஜானுவை பார்க்கும் பலருக்கும் நினைவுக்கு வருவது பள்ளி பருவத்தில் வந்த தங்களது முதல் காதல் தான்.

காதலில் காத்திருப்பும் ஒரு சுகம் தான் என்பதை உணர்த்தி, பல இதயங்களை நொறுக்கிய விண்டேஜ் காதல் கதை 'சீதா ராமம்'. போர் பின்னணியில் இவ்வளவு அழகாக ஒரு காதல் கதையை சொல்ல முடியுமா? என பலரையும் ரசிக்க வைத்த காதல் ஓவியம் இந்த திரைப்படம்

துல்கர் சல்மானின் ரசிகர்கள் கொண்டாடிய இந்த படம், மிருணாள் தாகூருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக காரணமாகியது. இந்தப் படமும் இன்று ரீ ரிலீஸாகிறது.

பலரும் பார்த்த முதல் ஹாலிவுட் படம் இதுவாக தான் இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உலக அளவில் பல இதயங்கள் கொண்டாடிய அழகிய கடல் காதல் காவியமான 'டைட்டானிக்' திரைப்படமும் இன்று தான் ரீ-ரிலீஸாகிறது.

மதங்களைக் கடந்த மகத்துவமான காதல் என்றும் பிரியாதது என்பதை உணர்த்திய ஷாருக்கான் - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் கடந்த 2004ல் வெளியான Veera-Zara திரைப்படமும் இன்று ரீ-ரிலீஸாகிறது.

காதல் ஒருவரை அழகாக மாற்றக்கூடியது... பல மாற்றங்களை நமக்குள் தரக்கூடியது... எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்குள் தோன்றும் காதல் மிக அன்பானதும் கூட என்பதை உணர்த்திய பாலிவுட் படமான யே ஜவானி ஹை தீவானி படமும் இன்று ரீ-ரிலீஸாகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சில திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகிகளின் கதாபாத்திரம் அவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கும். அப்படி ஒரு படம் தான் தமிழில் பரத் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான 'கண்டேன் காதல்'.

இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான 'ஜப் வி மெட்' திரைப்படமும் இன்று ரீ ரிலீஸ் ஆகிறது. காதல் என்பது ஒரு முறை பூக்கும் பூ மட்டுமல்ல... காதல் தோல்விக்கு பிறகும் உங்களை காதல் துரத்தலாம் என்பதை சொல்லும் படம் தான் இது.


Next Story

மேலும் செய்திகள்