2 விருதுகளை தட்டி சென்ற 'ஜெய் பீம்'

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த படமாக ஜெய் பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
x
தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த படமாக ஜெய் பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், 12வது தாதா சாகேப் திரைப்பட விழாவில் விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், ஜெய் பீம் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படமாக ஜெய் பீம் தேர்வு செய்யப்பட்டதோடு, ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். படத்தின் தயாரிப்பாளரான 2-டி நிறுவனம், இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்