"நடிகை சித்ரா தற்கொலைக்கு அரசியல் புள்ளிகளே காரணம்" - கணவர் பரபரப்பு புகார்

நடிகை சித்ரா தற்கொலைக்கு பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிகள் இருந்ததாக அவரது கணவர் ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
x
நடிகை சித்ரா தற்கொலைக்கு பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளிகள் இருந்ததாக அவரது கணவர் ஹேமந்த் குற்றம்சாட்டியுள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹேமந்த் புகார் அளித்துள்ளார். அதில், தமது மனைவி சித்ராவின் தற்கொலை பின்னணியில், பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர்களிடம் ஒரு கும்பல் தன்னை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் புள்ளிகள் மற்றும் பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பல் என இருதரப்பிலும் தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், இதனால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்