திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக புகார் - திரைப்பட தயாரிப்பாளர் வாராகியை கைது செய்த போலீஸ்

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் வாராகியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான
x
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் வாராகியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் திரைப்பட தயாரிப்பாளரான வாராகி என்பவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் வடபழனி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வாராகியை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்