நடிகர் அல்லு அர்ஜுனை பாராட்டிய அன்புமணி

நடிகர் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
x
நடிகர் அல்லு அர்ஜுன் செயலை பாராட்டி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். நடிகர் அல்லு அர்ஜுன் பெரும் தொகையை ஊதியமாக கொடுத்தாலும் புகையிலை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியை அறிந்து, அவரது சமுதாய அக்கறையை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நடிகர்களும் புகை பிடிக்கும் காட்சிகளை அவர்களின் திரைபடத்தில் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்