"எனக்குள் இருந்த உண்மையை எழுதினேன்" - "மோடி குறித்த கருத்துக்கு இளையராஜா விளக்கம்" - கங்கை அமரன் தகவல்

பிரதமர் மோடி குறித்து, எனக்குள் இருந்த உண்மையை எழுதினேன் என்றும், விமர்சனங்களை தான் படிப்பதில்லை என்றும் இளையராஜா கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி குறித்து, எனக்குள் இருந்த உண்மையை எழுதினேன் என்றும், விமர்சனங்களை தான் படிப்பதில்லை என்றும் இளையராஜா கூறியதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, புத்தகம் ஒன்றிற்கு எழுதிய முன்னுரையில், சமூக நீதி வி‌ஷயத்தில் பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பு எழுந்த‌து. இந்நிலையில், தனக்குள் இருந்த உண்மையைதான் எழுதியதாகவும், விமர்சனங்களை தான் படிப்பதில்லை எனவும் இசைஞானி இளையராஜா தெரிவித்த‌தாக கங்கை அமரன் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டாம் என இளையராஜா தெரிவித்த‌தாக கங்கை அமரனிடம் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்