'பீஸ்ட்' விமர்சனம்... "கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு..." - பேரரசு கருத்து

தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல" என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
x
'பீஸ்ட்' விமர்சனம்... "கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு..." - பேரரசு கருத்து

"கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல" என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படம் விமர்சனம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு தமிழ் படம் வெளியாகி அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதும் அழகல்ல என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது நம் தமிழ்மொழியின் கவுரவப் பிரச்சனை என்று தெரிவித்த பேரரசு, இது கலையையும் தாண்டி தமிழை இழிவு படுத்துவது என்று குறிப்பிட்டார். அத்துடன், எல்லோரும், தமிழர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்று பேரரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்