விபத்தினால் நடக்க முடியாத நிலையிலும் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்!

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில்...
x
விபத்தினால் நடக்க முடியாத நிலையிலும் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்!

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த விஜய் ரசிகரான கோபி கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். படம் ரிலீஸ் ஆனதால் அதிகாலை 4 காட்சிக்கு நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் வந்து ஸ்டிக் துணைகொண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், கேன்சர் நோயாளி கடைசியாக யாரையாவது பார்க்க வேண்டும் என நினைப்பார்களே.. அதை போல நண்பர்கள் குடும்பத்தினர் தவிர நான் அண்ணன் விஜயைபார்க்க வேண்டும் என நினைத்தேன்..!! ஆனால் இதுவரை நேரில் பார்த்ததில்லை தற்போது பீஸ்ட் படம் வாயிலாக அண்ணனை பார்க்க வந்து இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்