பீஸ்ட் கொண்டாட்டத்துக்கு தடை... விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்!

பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு நெல்லை போலீசார் தடை விதித்தால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
x
பீஸ்ட் கொண்டாட்டத்துக்கு தடை... விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்!

பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு நெல்லை போலீசார் தடை விதித்தால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பீஸ்ட் திரைப்படம் ரிலீசை வெகுவிமரிசையாக கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பீஸ்ட் டிரைய்லர் வெளியான நாளில், நெல்லையில் உள்ள தியேட்டரில் இருக்கைகளை உடைத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதை அடுத்து, பீஸ்ட் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்தனர். தியேட்டரில் கலை நிகழ்ச்சி நடத்தவோ, கட் அவுட்கள் வைக்கவோ அனுமதி இல்லை என்றும், தியேட்டர் முன்பாக வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதித்தனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்