கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்... ஆஸ்கார் விழாவில் பங்கேற்க வாழ்நாள் தடை?

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆஸ்கார் விருது வழங்கும் அமைப்பு இன்று கூடுகிறது.
x
கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்... ஆஸ்கார் விழாவில் பங்கேற்க வாழ்நாள் தடை?

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆஸ்கார் விருது வழங்கும் அமைப்பு இன்று கூடுகிறது. ஆஸ்கார் விருது விழாவில், தன் மனைவியை உருவ கேலி செய்ததற்காக, கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் மேடையிலேயே அறைந்த விவகாரம் பேசு பொருளானது. தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கார் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க இன்று ஆஸ்கார் அமைப்பு கூடுகிறது. வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்