'பீஸ்ட்' படத்திற்கு குவைத் அரசு தடை!

நடிகர் விஜயின் "பீஸ்ட்" திரைப்படம் குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி பல்வேறு நாடுகளில் ரீலீசாகிறது. இந்த சூழலில், படத்தில் பாகிஸ்தான் அமைச்சரை நடிகர் விஜய் கடத்துவது போன்று காட்சிகள் இருப்பதாகவும், இதனால் பீஸ்ட்டை குவைத்தில் வெளியிட அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் FIR, துல்கர் சல்மானின் குருப் படங்களுக்கு குவைத் அரசு தடை விதித்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்