இளையராஜா தொடர்ந்த வழக்கு - இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1980 களில் வெளியான 20 படங்களின் இசையை பயன்படுத்த ஏற்கனவே இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர்களுக்கு படத்தின் உரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிக்கு உரிமையாளர்கள் இல்லை எனவும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் உத்தரவு அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது எனவும் கூறப்பட்டது. வாதங்கள், விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்