இந்திய சினிமாவில் மைக் டைசன் - 'லைகர்' புதிய அப்டேட்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
x
இந்திய சினிமாவில் மைக் டைசன் - 'லைகர்' புதிய அப்டேட்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழகத்திலும் பெருவாரியான ரசிகர் கூட்டத்தை தன்வசம் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா.

தற்போது குத்துச்சண்டையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் லிகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நடிப்பது..

குத்துச்சண்டை களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தால் போட்டியாளர்களை நிலைகுலைய செய்தவர், தற்போது குத்துச்சண்டை கதைகளம் கொண்ட லிகர் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார்.

லேட்டஸ்ட் அப்டேட்டாக மைக் டைசன் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.

ஆக மொத்தம், ஆகஸ்ட் மாதத்தில் மைக் டைசனுடன் இணைந்து ரசிகர்களை கவர தயாராகிவிட்டார் விஜய் தேவரகொண்டா..

Next Story

மேலும் செய்திகள்