இதுதான் கதையா? 'பீஸ்ட் டிரெய்லர்' சொல்லும் செய்தி!

விஜயின் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
x
இதுதான் கதையா? 'பீஸ்ட் டிரெய்லர்' சொல்லும் செய்தி!

விஜயின் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

எப்போதும் விஜய் படம் ரிலீஸ் என்றால் அந்த நாள் திருவிழாவாக இருக்கும்.... ஆனால் தற்போது டிரெய்லர் ரிலீஸே பல இடங்களில் திருவிழாவானது.

சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை என தமிழகத்தில் பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் வெளியானது பீஸ்ட் டிரெய்லர்...

அனிருத் இசையில், செல்வராகவன் பின்னணி குரலுடன் டிரெய்லர் தொடங்க, உளவுத்துறை அதிகாரியாக என்ட்ரீ கொடுத்தார் விஜய்.. சென்னை ஈ.சி.ஆரில் உள்ள வணிக வளாகம் தீவிரவாதிகளால் சுற்றி வளைக்கப்பட, அங்கு எதேச்சையாக விஜய் சிக்கிக்கொள்கிறார்.

அரசியல் வாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக வரும் செல்வராகவன், விஜய் பாத்திரம் பற்றி சிலாகிப்பதும், அதன் பிறகு விஜய் பேசும் வசனங்களும் தான் டிரெய்லரின் ஹைலைட்.... விசுவலாக டீரீட்டை கொடுத்தது மட்டுமின்றி, இசையும், ஒளிப்பதிவும் மிரளவைப்பதாக ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் வணிக வளாகத்தை சுற்றி வளைக்கும் தீவிரவாதிகள், அங்கு மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து மிரட்ட, ஹீரோவான விஜய் மக்களை மீட்கிறாரா இல்லையா? என்பதுதான் கதையாக இருக்குமோ என யூகிக்க வைக்கிறது... கதை இதுதான் என பலரால் யூகிக்க முடிந்தாலும், கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தில் மேக்கிங் மூலமே நெல்சன் போற்றப்பட்டார்...

இதேபோல பீஸ்ட்டிலும் கெத்து காட்டுவார் என்பதே படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களின் நம்பிக்கை.... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பீஸ்ட்... ஏப்ரல் 13ல் விடை தெரியும்...

Next Story

மேலும் செய்திகள்