ஹாலிவுட் அகாடமியிலிருந்து ராஜினாமா செய்தார் நடிகர் வில் ஸ்மித்!

தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த நடிகர் வில் ஸ்மித் ஹாலிவுட் திரைப்பட அகாடமியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
x
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த நடிகர் வில் ஸ்மித் ஹாலிவுட் திரைப்பட அகாடமியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது, நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், "Hollywood Academy"-ல் இருந்து வில் ஸ்மித் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இனி அவர் ஆஸ்காருக்கு வாக்களிக்க முடியாது என்றும், எனினும் ஆஸ்கார் விழாக்களில் அவர் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்