நீலகிரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
x
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு திரைப்பட படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நீலகிரியில் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் வரவு அதிகரித்து காணப்படுவதால் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்