அப்போ சூர்யா, இப்போ கார்த்தி... 16 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை லைலா, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
x
திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்த நடிகை லைலா, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை லைலா, தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை தவிர்த்தார். இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்பொழுது நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் திரைப்படத்தில் நடிக்க நடிகை லைலா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்