'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் - பீதியில் உறைந்த ரசிகர்கள்

ஆந்திராவில் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க துப்பாக்கியுடன் வந்த ரசிகரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
x
ஆந்திராவில் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க துப்பாக்கியுடன் வந்த ரசிகரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டம், பெத்தாபுரத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது. அப்போது திரைப்படத்தை காண வந்த ரசிகர் ஒருவர் கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு திடீரென திரைக்கு முன் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திரையரங்கு வளாகத்தில் துப்பாக்கியுடன் அவர் சுற்றியதால் படத்தைக் காண வந்த ரசிகர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருந்த அவர், அதனை பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்