ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை நிறுவன தின நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை, ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
x
ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை நிறுவன தின நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடை, ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28ஆம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அமைச்சர் காந்தி, ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதவற்றோருக்கு நலத் திட்டங்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ஆடை, ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளைக்காக ஏலம் விடப்பட்டது. பிரமோத் சுரடியா என்பவர், ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்திய வெள்ளி நிற ஆடையை, ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்