நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணி , ஐசரி கணேஷ் அணி பெற்ற வாக்கு எவ்வளவு?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
x
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில்  நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் வழக்கு காரணமாக எண்ணப்படவில்லை. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கூடுதல் வாக்கு புகாரையடுத்து  துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை  நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது . வாக்கு எண்ணிக்கை முடிவில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு  போட்டியிட்ட நாசரும்,  பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும் வெற்றி பெற்றனர். இதனை 
தேர்தல் சிறப்பு அதிகாரியும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பத்மநாபன் அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்