நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
x
நடிகர் துல்கர் சல்மானுக்கு கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். துல்கர் சல்மான் சொந்தமாக தயாரித்து, நடித்த "சல்யூட்" திரைப்படம் தியட்டரில் ரிலீஸ் செய்ய இருந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், துல்கர் சல்மானுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள, திரையரங்க உரிமையாளர், இனி வரும் காலங்களில் துல்கர் சல்மானின் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்