விருதுகளை குவித்து வரும் "ஜெய் பீம்" படம்

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில், சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.
விருதுகளை குவித்து வரும் ஜெய் பீம் படம்
x
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில், சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. 


ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசிய இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்திற்கு சர்வதேச அளவில் பல்வேறு அங்கீகாரங்களும், விருதுகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. சமீபத்தில் ஆஸ்கார் விருதுகள் தகுதி பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம் பிடித்த நிலையில், தற்போது 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. இதில், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக லிஜோ மோல் ஜோஸும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறந்த படத்திற்கான விருதை ஜெய் பீம் பெற்றுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்