கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் வடிவேலு "உடல்நிலை சீராக உள்ளது - விரைவில் டிஸ்சார்ஜ்" மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

நடிகர் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
x
நடிகர் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், நடிகர் வடிவேலு கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்