முதல்வருடன், நடிகர் சந்தானம் சந்திப்பு

முதல்வருடன், நடிகர் சந்தானம் சந்திப்பு
x
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் சந்தானம், படப்பிடிப்பிற்கான வரியை குறைக்க கோரிக்கை விடுத்தார். புதுச்சேரியை மையமாக வைத்து, நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் சந்தானம், அவரிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்தானம், படப்பிடிப்பு வரியை குறைக்கவும், சில இடங்களில் சிறப்பு அனுமதி வழங்கவும் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்