நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு
x
நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் சங்க தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாகவும், தேர்தலுக்காக 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மீண்டும் தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு எதிராக புகார் அளித்த ஏழுமலை தரப்பு வழக்கறிஞர், நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலில் பல்வேறு குளறுபடி இருப்பதால்,உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து, புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்