சலசலப்பை ஏற்படுத்திய 'தலைவி' திரைப்படம் : திமுக - எம்.ஜி.ஆர். உறவு முறிந்தது ஏன்?

அண்மையில் வெளியான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாப்பாத்திரம் தொடர்பான காட்சிகளுக்கு அதிமுக வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு....
சலசலப்பை ஏற்படுத்திய தலைவி திரைப்படம் : திமுக - எம்.ஜி.ஆர். உறவு முறிந்தது ஏன்?
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பேசும் படமாக வெளியாகியிருக்கிறது 'தலைவி'. கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, நாசர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார்.16 வயது நடிகை ஜெயலலிதா முதல் 1991-ல் முதல்வர் ஜெயலலிதா வரையிலான வாழ்க்கைப் பயணம்தான் 'தலைவி'. ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆருடனான உறவு, ஆர்.எம்.வீரப்பனுடனான பகை என 91-ல் முதல்வராவதற்கு அவர் கடந்து வந்த சவால்களைப் பற்றிப் பேசுகிறது இத்திரைப்படம்.படம் வெளியான நிலையில், சர்ச்சைகள் எதுவும் பெரிதாக இல்லாததால், தலைவி திரைப்படம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், தலைவி படக்குழுவினரை பாராட்டினார்.அதேநேரம், படத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் தொடர்பான காட்சிகள் உண்மைக்கு புறம்பாக இருப்பதாக விமர்சனங்களும் எழாமல் இல்லைஎனவே, சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பாக திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்றதற்கு சொல்லப்படும் காரணம், அதிமுக மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.
வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும், கற்பனை கலந்த புனைவு என்ற போர்வையில் கதை மற்றும் கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பு மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக சலசலப்பு உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்