யார் இந்த டான்சிங் ரோஸ்? 90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ்
பதிவு : ஜூலை 24, 2021, 04:39 PM
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
யார் இந்த டான்சிங் ரோஸ்? 90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் இந்த பாத்திரத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

1970களில் எமர்ஜியன்சி அமலில் இருந்த போது, தற்போதைய வடசென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த ரோசமான ஆங்கில குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..விறுவிறுப்பான காட்சிகள், கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்கள் என ரசிகர்களை சிலாகிக்க வைத்துள்ளது பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை.இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.கதாநாயகனை எதிர்த்து சண்டையிடும் பாத்திரமாக இருந்தாலும், கதாநாயகன் அளவிற்கு பேசப்படுகிறது டான்சிங் ரோஸ் பாத்திரம். முதலில் டம்மியாக இருப்பது போன்று காட்டப்பட்டாலும், இன்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸில் டான்சிங் ரோஸ் பாத்திரத்திற்காக வைக்கப்பட்ட காட்சிகள் தரமானவை...இந்த பாத்திரம் ரியல் டான்சிங் ரோஸான PRINCE NASEEM HAMEED-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 90களில் இருந்து 2002ஆம் ஆண்டு வரை குத்துச்சண்டை போட்டிகளில் கவனத்தை ஈர்த்தவர். தனித்துவமான ஆட்டத்திறனால் ரசிகர்களை கவர்ந்தவர் இந்த நசீம் இப்படி ரியல் டான்சிங் ரோஸை அப்படியே கண்முன் கொண்டு வந்து, ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டார் ரீல் டான்சிங் ரோஸாக நடித்துள்ள சபீர்..ஆயுத எழுத்து படத்திலேயே துணை நடிகராக திரையில் தோன்றிய சபீர், அடங்க மறு, பேட்ட படத்தில் நடித்திருந்தாலும், இந்த டான்சிங் ரோஸ் தான் அடையாளம் காட்டி கொண்டாட வைத்துவிட்டது.தமிழ் சினிமாவில் தனித்து ஜொலிக்கும் இந்த டான்சிங் ரோஸ்....


தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

762 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

91 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

'விக்ரம்' படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி இணைந்துள்ளார்.

71 views

சிம்புவின் மாநாடு பட டிரைலர் எப்போது? - சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

36 views

ரஜினி, சிம்புவுடன் மோதும் அருண் விஜய் - தீபாவளிக்கு வெளியாகும் அருண் விஜய்யின் 'வா டீல்'

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "வா டீல்" திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

51 views

எஸ்.பி.பி : காற்றில் கரைந்த ஓராண்டு...அசாத்திய பாடல்கள் தந்த குரல் மன்னன்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

26 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

46 views

"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.