நட்சத்திர தம்பதி அமீர் கான் - கிரண் ராவ் விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளானா ஆமீர் கான் மற்றும் கிரண் ராவ், தாங்கள் விவாகரத்து செய்யப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
நட்சத்திர தம்பதி அமீர் கான் - கிரண் ராவ் விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு
x
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 15 வருட திருமண வாழ்க்கை பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் காதல் நிறைந்தாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து விடுபட்டு, தங்கள் மகனுக்கு பெற்றோர்களாக உறவைத் தொடர இருப்பதாகவும் கூறியுள்ளனர்.  பல நாட்களாகவே இந்த பிரிவை திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அதை நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். பட வேலைகள், பானி பவுண்டேஷன் மற்றும் இருவருக்கும் பிடித்தமான பிற வேலைகளில் இணைந்தே செயலாற்ற போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவாகரத்தை முடிவாக பார்க்காமல், புதிய பயணத்தின் தொடக்கமாக பார்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்