அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித் குமார் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
x
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித் குமார் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் நடிகர் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து நீலாங்கரை போலீசார் அஜித் குமார் வீட்டில் ஒரு மணி நேரமாக சோதனை நடத்தினர். இதில் வெடிபொருள் ஏதும் சிக்காததால் வெறும் புரளி என்பதை அறிந்துள்ளனர். இதையடுத்து போன் செய்த நபர் யார் என்று விசாரித்த போது மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்குமார் என்பதும் இவர் ஏற்கனவே நடிகர் விஜய் , முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்