நடிகர் நிதிஷ் வீரா மறைவு; திரைத்துறையினர் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா இன்று காலமானார்.
நடிகர் நிதிஷ் வீரா மறைவு; திரைத்துறையினர் இரங்கல்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா இன்று காலமானார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் போன்ற படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா. துணை நடிகராக சிறிய பாத்திரங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்பு பல்வேறு திரைப்படங்களில் கவனம் பெறக்கூடிய பாத்திரத்தில் தோன்றி அடையாளம் பெற்றார். சமீபத்தில் அவர் காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகனாகவும், அசுரன் திரைப்படத்தில் சாதிய வன்மம் கொண்ட எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்