இந்தியன் 2 படம் - இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - நீதிபதிகள்

இந்தியன்-2 படம் தொடர்பான பிரச்னைக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சங்கர் தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
x
இந்தியன்-2 படம் தொடர்பான பிரச்னைக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சங்கர் தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கமல் நடிக்கும் இந்தியன்- 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி - நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அடுத்த ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்,  வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான 5 மாதங்களில் படத்தை முடித்து கொடுக்கப்படும் என இயக்குநர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்