"வலிமை" அப்டேட் - அஜித் பரபரப்பு அறிக்கை
பதிவு : பிப்ரவரி 16, 2021, 08:47 AM
வலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நடிகர் அஜித்குமாருக்கென திரையுலகில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எவ்வித பின்புலமும் இன்றி, முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் உயர்ந்திருக்கிறார் என்பதே அவரது ரசிர்களின் பெரும் வரவேற்புக்கு காரணம். தல என்று செல்லப் பெயரிட்டும் கொண்டாடித் தீர்க்கின்றனர், ரசிகர்கள்.... போனிகபூர் தயாரித்து, வினோத்குமார் இயக்கத்தில் 60 வது படமாக அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை. இதில் காவல்துறை அதிகாரியாக அஜித்குமார் நடிக்கிறார். இதைத்தவிர வேறெந்த தகவலும் வெளியாகாத நிலையில், போனிகபூர், இயக்குநர் வினோத்குமார் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் வரை அஜித் ரசிகர்கள் கேட்கும் கேள்வி 'வலிமை பட அப்டேட் என்ன?' என்பது தான். சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரெண்டாகும் கேள்விகளில் ஒன்றாகவும் இது மாறி உள்ளது....

இதையறிந்த நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வலிமை படம் வெளியாகும் காலத்தை, தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன் என்று தெரிவித்துள்ள அஜித்குமார், அதுவரை ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக் கொாண்டுள்ளார். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்,. நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை.

நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும் எனவும் அஜித்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல்வேறு வகைகளில் ரசிகர்கள் தங்கள் அன்பை அபிமான நடிகருக்கு வழங்கி வருகின்றனர். ஒருவருக்கு தர்மசங்கடத்தை உருவாக்காத அபிமானமே நல்ல ரசிகருக்கு அழகு.....

தந்தி டிவி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் தேவராஜூடன் டேனியல் ராஜா.....

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

426 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

பிற செய்திகள்

'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் டீசர் வெளியீடு - ஹர்பஜன் சிங்குடன் ஜோடி சேர்ந்த லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

108 views

நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ஸ்னீக் பீக் - எஸ்.ஜே .சூர்யாவின் வசனத்திற்கு வரவேற்பு

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

159 views

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஹரிஷ் கல்யாணின் "ஓ மணப் பெண்ணே" - முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

29 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

80 views

பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் "கண்டா வர சொல்லுங்க" - யார் இந்த "தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்"

கிராமிய பாடல்கள் பாடி, அனைவரையும், மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் கிராமிய கலைஞர் தேக்கப்பட்டி சுந்தர்ராஜன்.

807 views

"தலைவி" திரைப்படம் ஏப்ரல் 23இல் வெளியீடு

கங்கான ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக, படக்குழு அறிவித்துள்ளது

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.