தள்ளிப்போகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு - ரஜினி எடுத்த புதிய முடிவு?

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, 4 பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்டது.
தள்ளிப்போகும் அண்ணாத்த படப்பிடிப்பு - ரஜினி எடுத்த புதிய முடிவு?
x
ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, 4 பேருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வந்த நிலையில், சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கு படப்பிடிப்பை தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது

மாஸ்டர் படத்தின் 7வது ப்ரோமோ - அசத்தல் பஞ்ச் வசனத்துடன் வெளியான ப்ரோமோ
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தினமும் படத்தின் புதிய ப்ரோமோக்களை வெளியிட்டு வரும் படக்குழு நேற்று ஏழாவது ப்ரோமோவை வெளியிட்டது. அதில் "நைய்யப்புடை" என்று விஜய் பேசும் பஞ்ச் வசனம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
"வெளிநாடு ஓடிடி வெளியீடு நிறுத்தம்" - ஈஸ்வரன் படக்குழு அறிவிப்பு
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படம் வெளியாகும் தினத்தன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட போவதாக படக்குழு அறிவித்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வெளிநாட்டு ஓடிடி வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஓடிடியில் வெளியிட எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது என்றும், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்றும் படக்குழு கோரிக்கை வைத்துள்ளது

பூமி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி - ஜனவரி 14ல் ஓடிடியில் பூமி வெளியீடு
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ஜெயம் ரவிக்கு 25ஆவது படமாகும். இதனை, ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்‌ஷ்மன் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கபடதாரி பட டிரைலர் இன்று வெளியீடு - படத்தின் டிரைலரை வெளியிடும் மாதவன், ஆர்யா
நடிகர் சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 5 மணிக்கு, நடிகர்கள் மாதவன் மற்றும் ஆர்யா ஆகியோர் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில், நாசர், நந்திதா ஸ்வேதா, உள்ளிட்டோர் நடித்துள்ளார். கபடதாரி திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது





Next Story

மேலும் செய்திகள்