மதுரையில் 40 திரையரங்குகளில் மாஸ்டர் - முதல் நாளில் மட்டும் 200 காட்சிகள்
மதுரை மாவட்டத்தில், மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தினத்தன்று மட்டும் 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை திரையரங்குகளில் வெளியாகிறது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். இந்நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு, லாபம் ஈட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 40 திரையரங்குகளில் மாஸ்டர் வெளியாக உள்ளது. முதல் நாளில் மட்டும் 200 காட்சிகளை 70 ஆயிரம் ரசிகர்கள் பார்க்க உள்ளனர். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. மேலும் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் 500 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Next Story

